பல்லவியும் சரணமும் II - பதிவு 11
சில SPB பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!
ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))
ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!
3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!
1. பௌர்ணமி நேரம் இரவில் ஆடும் ஒளி தீபம் ...
2. செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி, உயிரோடு சேரும் சுருதி ...
3. உறவுறுவாள் என தானோ மனதை ....
4. தங்கப்பூவே சந்திப்போமா, சந்தித்தாலும் சிந்திப்போமா ?
5. காலம் என் பேரை பேசும்போது வாழ்வு எனது வாசல் ...
6. வாழ்ந்திடத் தான் பொறந்தாச்சு, வாசல்கள் தான் ...
7. இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம், கோலம் கலைந்ததே, புது சோகம் பிறந்ததே ...
8. ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் ...
9. ஆத்தோரம் பூங்கரும்பு, காத்திருக்கும் சிறு எறும்பு, அக்கரையில்...
10. கல்லுச்சிலை போல் நீ நிற்க வேண்டும், கண்கள் பார்த்து தலை வார வேண்டும்...
11. இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர்...
12. சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட...
என் நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
15 மறுமொழிகள்:
11. பனிவிழும் மலர்வனம் நினைவெல்லாம் நித்யா
2. வெள்ளிச்சலங்கைகள் கொண்ட - காதல் ஓவியம்
4. போகுதே போகுதே - கடலோரக் கவிதைகள்
1. நாத வினோதங்கள் - சலங்கை ஒலி
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்..!
//1. பௌர்ணமி நேரம் இரவில் ஆடும் ஒளி தீபம் ...//
நாதா வினோதங்கள் நடன சங்கீதங்கள்...
படம் சலங்கை ஒலி...!
//8. ஆசைக்கு தாள் போட்டு அடைத்தென்ன லாபம் ...//
பூங்கொடிதான் பூத்ததம்மா ...!
மொளன ராகம் !
1. பௌர்ணமி நேரம் இரவில் ஆடும் ஒளி தீபம் ... - நாத வினோதங்கள், சலங்கை ஒலி, கே விஸ்வனாத்.
4. தங்கப்பூவே சந்திப்போமா, சந்தித்தாலும் சிந்திப்போமா ? போகுதே.. போகுதே, கடலோரக்கவிதைகள், பாரதிராஜா
6. வாழ்ந்திடத் தான் பொறந்தாச்சு, வாசல்கள் தான் ... - ராஜா கைய வச்சா... அபூர்வ சகோதரர்கள், சிங்கீதம் சீனிவாச ராவ்
12. சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட... சின்ன மணிக்குயிலே.. அம்மன் கோயில் கிழக்காலே, ஆர் சுந்தரராஜன்.
6. ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லே
ஜெயஸ்ரீ, Suresh, கோவி.கண்ணன் [GK], Latha,
Thanks for your participation. All you found out, are CORRECT:)
Hints for pallavis, not found !
3 - TR movie
5 - Actor Mohan
7 - something to do with HEART
9 - Song related to Flowers !
10 - Flower and Desire
11 - Karthik is the hero
enRenRum anbudan
BALA
நண்பர்களே,
என்ன யாரையும் காணோம் ! இன்னும் 6 பாடல்கள் மிச்சம் இருக்கின்றன ! மேலே கொடுத்துள்ள குறிப்புக்களை பார்த்து கண்டுபிடிக்கப் பாருங்கள் :)
எ.அ.பாலா
5.கவிதை பாடு குயிலே குயிலே (தென்றலே என்னைத் தொடு)
I will give the pallavis for the unanswered saraNams after 3 hours :)
//இளமையின் கனவுகள் கண்ணோரம் துளிர்...//
பதினோராவது வரி விழியோரம் என்று இருந்தால்,
பனிவிழும் மலர்வனம்
உன்பார்வை ஒருவரம்
(நினைவெல்லாம் நித்யா)
ஆனால் கண்ணோரம் என்று இருந்தால் - தெரியாது.
வசந்தன்,
என் தவறை சுட்டியமைக்கு நன்றி. உங்கள் பதில் சரியே :)
ஆசாத்,
விடை சரி, நன்றி !
கண்டுபிடிக்கப்படாதவற்றுக்கு பல்லவிகள்:
3. இது குழந்தை பாடும் தாலாட்டு (ஒரு தலை ராகம்)
7. இதயமே இதயமே உன் மௌனம் என்னைக் கொல்லுதே (மௌன ராகம்)
9. மனமெல்லாம் செண்பகப்பூ, வானெல்லாம் குங்குமப்பூ ...
10. புத்தம்புது மலரே, என் ஆசை சொல்லவா ?
ரொம்ப நாளைக்கப்புறம், சில பல்லவிகளை நானே உங்களுக்கு சொல்ல வேண்டிய நிலை வந்தது குறித்து கொஞ்சம் disappointment.
எ.அ.பாலா
நான் too late
Post a Comment